6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி சடலமாக மீட்பு
ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பள்ளக்கொண்டா ராஜூ ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான ராஜு குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜுவின் கையில் பச்சைக் குத்தியிருந்ததை அடையாளமாகக் கொண்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தேடி வந்த நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராஜு கன்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்ததாக தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து ரூபாய் 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலின் பேரில், 30 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜூ என்பவரை போலீசார் கைது செய்வதற்கான சென்றுள்ளனர்.
அப்போது காவல்துறையினரைப்பார்த்தும் ஓடிய ராஜூ, ஓடும் ரயிலில் முன் விழுந்து இறந்ததாகக்கூறப்படுகிறது. இவர் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டறியப்பட்டதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்துள்ளனர்.
6 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்தவரை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்ற தெரிவித்து வந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இப்படி சிறுமியின் பாலியல் வன்முறை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி பேசியது பெரும் விவாதத்தினையும் ஏற்படுத்தியது/