அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 17 பேர் உயிரிழப்பு

Fire Hyderabad
By Karthikraja May 18, 2025 06:42 AM GMT
Report

ஹைதராபாத்தில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஹைதராபாத்தில் தீ விபத்து

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் அடையாளமான சார்மினார் அருகே உள்ள 3 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 

hyderabad fire incident - ஹைதராபாத் தீ விபத்து

தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் கரும் புகை எழுந்தது. அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுப்படுத்தினர். 

 17 பேர் உயிரிழப்பு

இந்த தீ விபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

hyderabad fire incident - ஹைதராபாத் தீ விபத்து

ஏசி கம்ப்ரசர் வெடித்ததால், பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து குறித்து அறிந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். 

நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யவும் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.     

இந்த தீ விபத்தில் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் தருவதாக அறிவித்துள்ளார்.