ஐதராபாத்தில் தெருநாய் கொலைவெறித் தாக்குதல் - தெருநாய்களை விரட்ட ஒடிசா அரசு திட்டம்...!

Hyderabad Odisha
By Nandhini Feb 23, 2023 11:32 AM GMT
Report

ஐதராபாத்தில் தெருநாய் கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தையடுத்து, தெருக்களிலிருந்து தெருநாய்களை விரட்டியடிக்க ஒரிசா அரசு திட்டமிட்டுள்ளது.

தெருநாய் கொலைவெறித் தாக்குதல்

தெருநாய்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் 4 வயது சிறுவனை தெருவில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டமாக சேர்த்து கடித்து குதறி கொன்றது.

இந்நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று ஐதராபாத்தில் உள்ள சைதன்யபுரியை சேர்ந்த மாருதி நகரில் ரிஷி என்ற 4 வயது சிறுவன் தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, 3-4 நாய்கள் சிறுவனை திடீரென தாக்கியது.

இத்தாக்குதலில், அவன் அலறி துடித்தான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ரிஷியின் குடும்பத்தினர் ஓடி வந்து நாய்களிடமிருந்து பத்திரமாக மீட்டனர். ரத்த வெள்ளத்தில் காயமடைந்த ரிஷியை உடனடியாக குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

hyderabad-dogs-from-streets-attack

தெருநாய்களை விரட்ட ஒரிசா அரசு திட்டம்

ஐதராபாத்தில் நாய்கள் தாக்கிய கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஐதராபாத் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், தெருநாய்கள் நடமாட்டம் இல்லாமல், தெருநாய்களை விரட்டிய அடிக்க ஒரிசா அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து தலைமை மாவட்ட கால்நடை மருத்துவர்களுக்கு (சிடிவிஓ) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விலங்கு வள மேம்பாட்டு அமைச்சர் ரணேந்திர பிரதாப் ஸ்வைன் டுவிட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ஐதராபாத்தில் நடந்த இந்த பயங்கரமான சம்பவத்தைப் பார்த்து, ஒரிசா மாநிலத்தில் 30 மாவட்டங்களின் அந்தந்த CDVOகளை கண்டிப்பாக விழிப்புடன் இருக்கவும், தெரு நாய்களை சாலையிலிருந்து அகற்றவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்குமாறு CDVO க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.