தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுவன் மரணம்... - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video Hyderabad Death
By Nandhini Feb 21, 2023 08:15 AM GMT
Report

ஐதராபாத்தில் தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுவன் மரணம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஐதராபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் தெருநாய்கள் கூட்டத்தில் 4 வயது சிறுவன் சிக்கிக்கொண்டான். விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கொடூரமாக கடித்து தாக்கியது.

பீதியடைந்த குழந்தை ஓட முயன்றது. ஆனால், மூர்க்கமான நாய்கள் குழந்தையை கீழே இழுத்தன. நாய்கள் அவனை தரையில் தள்ளி உடல் முழுவதுமாக கடித்து குதறியது. எவ்வளவோ முயற்சி செய்தும் நாய்கள் பிடியிலிருந்து குழந்தையால் தப்பிக்க முடியவில்லை.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, அவனது தந்தை விரைந்து ஓடி வந்து நாய்கள் கூட்டத்திலிருந்து குழந்தையை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தார். ஆனால், குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

தற்போது, 4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கும் தெருநாய்கள் சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.        

hyderabad-a-4-year-old-boy-death-by-stray-dogs