பயந்துட்டாங்க.. அது ரொம்ப அநியாயம் - முன்னாள் கேப்டன்கள் மோசமான விமர்சனம்!
இங்கிலாந்து அணி ஆட்டத்தை முன்னாள் கேப்டன்கள் விமர்சித்துள்ளனர்.
இங்கிலாந்து தோல்வி
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது குறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்,
கேப்டன்கள் விமர்சனம்
"இங்கிலாந்து அணி பயந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பந்து ஸ்விங் ஆனபோது, அவர்கள் அதிக ரிஸ்க் எடுத்து அதிரடியாக ஆட முற்பட்டனர். அவர்களுக்குத் தேவையானது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் மட்டுமே.
ஆனால், அவர்கள் பதற்றத்தில் தாங்கள் வழக்கமாக ஆடும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்," என்றார். மற்றொரு முன்னாள் கேப்டனான நாசர் ஹுசைன்,
"ஒருவேளை இந்தத் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் வென்றிருந்தால் அது மிகப்பெரிய அநியாயமாக இருந்திருக்கும்.
இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்திற்கு இந்த 2-2 என்ற சமமான முடிவு தகுதியானதுதான். சிராஜ் கடைசி விக்கெட்டை வீழ்த்தியது மிகவும் பொருத்தமாக இருந்தது," என்று தெரிவித்துள்ளார்.