Viral Video : துருக்கி பூகம்பம்... - இடிபாட்டுக்குள் 22 நாட்கள் கழித்து ஹஸ்கி நாய் உயிருடன் மீட்பு...!
துருக்கி பூகம்ப இடிபாடுகளுக்குள் 22 நாட்கள் கழித்து ஹஸ்கி நாய் மீட்கப்பட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
பல அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தில் கீழே இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

22 நாட்கள் கழித்து ஹஸ்கி நாய் மீட்பு
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், துருக்கி பூகம்ப இடிபாடுகளுக்குள் 22 நாட்கள் கழித்து ஹஸ்கி நாய் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த உலக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Dog owner, Murat Arici, called for help after hearing his Siberian Husky within the rubble of a building in Antakya Turkey, 22 days after the earthquake. pic.twitter.com/WOy4l0eQtn
— Sk Boz Phd (@ProfessorBoz) March 2, 2023