தூக்கில் தொங்கிய மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொடூர கணவர்
தூக்கில் தொங்கிய மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொடூர கணவர் ஒருவர் குறித்த தகவல் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த பெண்ணின் நடத்தையில் அவரது கணவர் சந்தேகப்பட்டதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் சண்டை வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை சந்தேகித்த கணவனிடம் தனது நடத்தையை நிரூபிக்க கணவன் கண்முன்னே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள அந்தப்பெண் முடிவு செய்தார்.
இதனையடுத்து அவர் தூக்கில் தொங்க கயிறை மாட்டிக் கொண்டிருந்த போது அவரது கொடூர கணவர் அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
தற்கொலையை தடுத்து நிறுத்தாமல் மனைவி துடிதுடித்து தூக்கில் தொங்கி உயிரை இழக்கும் வரை வீடியோ எடுத்த கணவன் குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கிய மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொடூர கணவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.