மனைவியைக் கண்டித்த கணவர்: மனைவி எடுத்த விபரீத முடிவு
பரமகுடியில் இளம்பெண் ஒருவர் கணவர் கண்டித்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ், ரேஷ்மா தம்பதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரேஷ்மாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் சில நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் விமல்ராஜ் வீட்டில் இல்லாதபோது தனியாக சந்தித்து வந்துள்ளனர். ஒருநாள், ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்தபோது அவருடைய வீட்டிலிருந்து தென்னரசு வெளியே வந்துள்ளார். இதை பார்த்த விமல்ராஜின் நண்பர்கள் இந்த செய்தியை விமல்ராஜிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த விமல்ராஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ரேஷ்மா தனது சாவுக்கு விமல்ராஜின் நணபர்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.