கழுத்தில் நாய் சங்கிலியுடன் கணவரை வாக்கிங் கூட்டிச் சென்ற பெண்
கனடாவில் கணவரை நாய் போல வாக்கிங் அழைத்து சென்ற மனைவிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கனடாவின் கியூபெக் நகரில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளியே அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் செல்லப் பிராணிகளை வாக்கிங் அழைத்துச் செல்பவர்களுக்கு விதிமுறைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதை பயன்படுத்தி பெண் ஒருவர் தன்னுடைய கணவரை நாயாக மாறி வாக்கிங் அழைத்து சென்றார். இதை பார்த்த போலீசார், அந்த தம்பதிக்கு ரூ.3.44 லட்சம் அபராதத்தை விதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.