Live-வில் பேசிக்கொண்டிருந்த மனைவி - கணவன் கண்முன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை

By Nandhini Aug 10, 2022 11:42 AM GMT
Report

லைவ்வில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த மனைவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி ஞானபாக்கியபாய். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

செந்தில் சிங்கப்பூரில் இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கணவர் வெளிநாட்டில் உள்ளதால், அவருடன் அடிக்கடி ஞான பாக்கியபாய் வீடியோ காலில் தினமும் பேசி வந்துள்ளார்.

கணவன் - மனைவி சண்டை

நேற்று முன்தினம் இரவு, செந்திலுடன் வழக்கம்போல அவர் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீடியோ காலில் இருவருக்குள்ளும் திடீரென சண்டை வந்துள்ளது. இந்த சண்டையில் வாக்குவாதம் முற்றியதால், கோபமடைந்த ஞான பாக்கியபாய், செந்தில் லைவ்வில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செந்தில் வீடியோ காலில் லைவ்வாக இதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, பயந்துபோன செந்தில் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார்.

suicide

தூக்கில் தொங்கிய மனைவி

உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஆனால், ஞான பாக்கியபாய் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.