ரகசியமாக கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி - பரபரப்பு சம்பவம்
தெலங்கானா மாநிலம், சூர்யா பேட்டையைச் சேர்ந்தவர் பானு பிரகாஷ். இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மனைவியும், 2 குழந்தைகள் இந்நிலையில், இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனையடுத்து, பானு பிரகாஷ் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருக்கிறார்.
ஆனால், நான் கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்நிலையில், பானு பிரகாஷுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் ரகசியமாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த விஷயம் மனைவிக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, பானு பிரகாஷ் மனைவி, தனது உறவினர்களை அழைத்து கொண்டு கணவர் ரகசியமாக குடும்பம் நடத்தி வரும் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற மனைவி கணவரையும், கள்ளக் காதலியையும் அடித்து துவைத்தார்.
மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் மனைவி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில், பானுபிரகாஷ் மற்றும் அவருடைய கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.