கட்டிலுக்கு அடியில் கணவன் கண்ட அதிர்ச்சி: மனைவி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டத்தில் கணவனுக்கு தந்து தகாத உறவு தெரிந்துவிட்டது என்ற விரக்தியில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன்.இவருக்கு திருமணமாகி நாகலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேல்முருகன், பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வேல்முருகனின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் செவ்வாய்கிழமை பணி தாமதமாக முடிந்த நிலையில் நள்ளிரவு வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து தாமதமாக மனைவி கதவை திறந்த நிலையில், உள்ளே சென்று தனது ஆடைகளை மாற்றும் போது, கட்டிலுக்கு அடியில் ரமேஷ் இருந்துள்ளார். ஆத்திரத்தில் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை தாக்கிய வேல்முருகன், உடனடியாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். ஆனால் காலை வந்து புகார் அளிக்குமாறு வேல்முருகனை போலீசார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே, தனது கணவருக்கு தனது தகாத உறவு தெரிந்துவிட்டதே என்று நாகலட்சுமி, வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.