ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் கணவன் IPS- மனைவி IAS!
Vellore
By Fathima
தமிழ்நாட்டின் வேலூரில் ஒரே மாவட்டத்தில் கணவன் IPS மற்றும் மனைவி IAS ஆக பணியாற்றுகின்றனர்.
வேலூர் மாநகராட்சியின் புதிய மற்றும் பெண் ஆணையராக கேத்ரின் சரண்யா IAS நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது கணவர் ஏற்கனவே வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவராமன் IPS பணியாற்றி வருகிறார்.
ஒரே மாவட்டத்தில் கணவர் சிவராமன் காவல்துறை அதிகாரியாகவும், மனைவி மாநகராட்சி நிர்வாக ஆணையராகவும் பணியாற்றுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வேலூர் மாநகராட்சி அமைக்கப்பட்டதற்கு பின்னர் ஆணையராக பொறுப்பேற்கும் முதல் பெண் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
