திருமணமான மூன்றே நாளில் காதல் மனைவி எரித்துக் கொலை - மதுரையில் பயங்கரம்

madurai wifekilledbyhusband
By Petchi Avudaiappan Aug 07, 2021 09:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 மதுரையில் திருமணமான மூன்றே நாளில் காதல் மனைவியை கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் வறுகடலை மில் அருகே முட்புதரில் எரிந்த நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு முதற்கட்ட விசாரணையையும் தொடங்கினர். இதில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சோழவந்தான் பகுதியை சேர்ந்த சகாய ராஜ் - செல்வமேரி தம்பதியினரின் மகள் கிளாடிஸ் ராணி என்பது தெரியவந்தது. 20 வயதான அவரும், அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே கிளாடிஸ் ராணி கர்ப்பம் அடைந்ததால் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி இருவீட்டாரும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் தம்பதியினர் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர். கடந்த 4ஆம் தேதி வெளியே சென்று வரலாம் என்று ஜோதிமணி, கிளாடிஸ் ராணியை அழைத்துள்ளார்.

இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோரிடம் கூடஎதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். இதனையடுத்து மீண்டும் ஜோதிமணி மட்டும் தனியாக வீடு திரும்பி வந்த நிலையில் கிளாடிஸ் ராணியை காணவில்லை என கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களுடன் இணைந்து ஜோதிமணியும் ஊர்முழுக்க தேடுவது போன்று நாடகம் ஆடியுள்ளார்.

திருமணமான மூன்றே நாளில் காதல் மனைவி எரித்துக் கொலை - மதுரையில் பயங்கரம் | Husband Who Burnt His Love Wife In Madurai

இதனைத் தொடர்ந்து 4 ஆம் தேதி மாலை சோழவந்தான் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று பெற்றோர் புகார் செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் ஜோதிமணி மீது சந்தேகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜோதிமணியிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.

காதலித்து திருமணம் செய்த மனைவி கிளாடிஸ் ராணியின் கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல என்று சந்தேகம் அடைந்த ஜோதிமணி அவனியாபுரம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் வைத்து கிளாடிஸ் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.