நடத்தையில் சந்தேகம் - பேஸ்புக்கில் மனைவியின் ஆபாச புகைப்படங்களை பரப்பிய கொடூர கணவன்
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பிய கணவனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றம்
மதுரை மாவட்டம் மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் வண்டியூரை சேர்ந்த பெண்ணுக்கும் அண்மையில் திருமண முடிந்தது.
இந்த நிலையில் ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ராஜ்குமார், பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
கணவர் கைது
நண்பர்கள் மூலமாக தனது ஆபாசப் புகைபடம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் அப்பெண். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமாரின் பேஸ்புக் பக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து பரப்பியது அவர்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மனைவியின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய ராஜ்குமாரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.