வீட்டை விட்டு துரத்திய கொடூர கணவன்! கொட்டும் மழையில் கதறிய பெண் வக்கீல்!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த பிரியதர்ஷினி வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அரசு உதவி பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர் ராஜ ஷெரின் என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான முதலில் இருந்தே கூடுதல் வரதட்சனை கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பத்திருக்கிறார்.
மேலும் மனைவி பிரியதர்ஷினியையும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். திருமணமாகி ஓராண்டு கடந்த பின்பும், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை வீட்டைவிட்டு வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பல இடங்களில் தேடியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவரை அணுகமுடியாததால், மன உளைச்சலில் வீட்டின் வாசலில் அமர்ந்து பிரியதர்ஷினி கதறி அழுதுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணை
மீட்க பல மணி நேரம் முயற்சி செய்தனர். ஆனால் வக்கீல் உடையிலேயே தரையிலே அமர்ந்து கதறி அழுதபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.