கணவருடன் விஜய் மக்கள் மன்ற செயலாளர் கள்ள தொடர்பு - வரதட்சணை கேட்டு கொடுமை! மனைவி கதறல்!!
சென்னையில் தன் கணவர் விஜய் மக்கள் மன்ற செயலாளருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால், தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த திருமழிசையை சேர்ந்த திவ்யா, கடந்த 2006ம் ஆண்டு முத்து என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின் போது வரதட்சனையாக 200 சவரன் நகை கொடுத்துள்ளார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் முத்து, திவ்யாவிடம், மேலும் வரதட்சனை அளிக்குமாறு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென இவருக்கும், விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஏஞ்சலுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிந்து ஏஞ்சலுடன் வாழ முடிவெடுத்துள்ளார். நேரடியாக மனைவியிடம் சொல்லாமல், அவரே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், அவரது வரதட்சனை கொடுமையை அதிகமாக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த திவ்யா, கணவன் முத்து மீதும், கள்ளத்தொடர்பில் இருக்கும் ஏஞ்சல் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.