Tuesday, Jan 28, 2025

நண்பர்களுடன் உறவு வைக்க சொல்லி கணவர் டார்ச்சர் - அலறிய மனைவி..!

Coimbatore Sexual harassment Tamil Nadu Police
By Thahir 2 years ago
Report

கோவையைச் சேர்ந்த பிடெக் பட்டதாரியான 25 வயது பெண் ஒருவரை அவரது கணவர் உடலுறவுக்கு உள்ளாக்கி சித்தரவதை செய்ததோடு கணவர் நண்பர்களுடன் உடலுறவு செய்ய வலியுறுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை மீறிய கஞ்சா பழக்கம் 

கோவையைச் சேர்ந்த 25 வயது பிடெக் பட்டதாரி பெண், அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்காக பெண் வீட்டார் சார்பில், 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சீர்வரிசை கொடுத்துள்ளனர். தன் கணவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பதை திருமணத்துக்கு பின் அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

Husband Torture to have sex with friends

கணவரின் கஞ்சா பழக்கத்தை அவரது பெற்றோரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கஞ்சா இல்லாமல் அவரால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை என்றும் கஞ்சாவுடன், வயாகரா மாத்திரையும் உட்கொண்டு வந்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்ற போது மனைவி உடை மாற்றிய போது, கணவர் நிர்வாணமாக அவரை போட்டோ எடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போர்வையை சுற்றி கொண்டு அறையை விட்டு வெளியே ஓடி வந்தார். அதை பார்த்த பெண்ணின் மாமியார், மாமனார், கணவரின் அத்தை ஆகியோர் சேர்ந்து நிர்வாணமாக இழுத்துச் சென்று கணவரின் அறையில் தள்ளியதாக கூறப்படுகிறது.

நண்பர்களுடன் உறவு வைக்க சொல்லி வற்புறுத்தல் 

ஆபாச படத்தை பார்க்க வைத்த கணவர் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொண்டுள்ளார். இந்நிலையில், 2022 ஜனவரி பீளமேடு அருகே நண்பரின் ஷெட்டுக்கு மனைவியை கணவர் அழைத்துச் சென்றார் .

அங்கு தன் மொபைல் போனில் இருந்த ஆபாச வீடியோவை காண்பித்து மூன்று பேர் சேர்ந்து உறவில் ஈடுபட வற்புறுத்தினார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்கிருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து மகிளா கோர்ட்டில் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.