கணவருக்காக காத்திருந்த தமிழிசை சௌந்தராஜன்: பதவி பிரமாணதில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

bjp narayanasamy pondicherry
By Jon Feb 20, 2021 01:49 AM GMT
Report

புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் பதவி பிரமாணதின் போது நடந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த 2019 ம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதுச்சேரி துணை ஆளுநராக பதவி வகித்த கிரண் பேடி அவர்களுக்கு எதிராக அந்த மாநில முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனையடுத்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு புதுச்சேரி துணை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதன் பதவி பிரமாணம் நேற்று நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவரிடமிருந்து அளிக்கப்பட்ட வாரண்ட் எனக் கூறப்படும் கடிதத்தை தமிழிசை சவுந்தர்ராஜன் கையில் கொண்டுவரவில்லை. தலைமை நீதிபதி படிக்கத் தயாரானபோது அந்த கடிதத்தை தேடினார். அது தன்னிடம் இல்லை என்பதும் மேஜையில் இருப்பதை உணர்ந்து அவர் தனது கணவரான டாக்டர் சௌந்தரராஜனிடம் தெரிவித்தார்.

உடனடியாக டாக்டர் சௌந்தரராஜன் உள்ளே சென்று அந்த வாரண்ட் பேப்பரை எடுத்து வந்தார். அதற்குள் ஆளுநரின் செயலர் தன்னிடம் ஒரு நகல் இருப்பதாக குறிப்பிட்டார்.

இதனால் "அவரை கூப்பிடுங்க" என இரண்டுமுறை தமிழிசை கூறினார். அதற்குள் டாக்டர் சௌந்தரராஜன் வந்து வாரன்ட் காப்பியை கொடுத்தார். கணவருக்காக காத்திருந்த பிறகுதான் அவர் துணை ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டார். உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்