குஷ்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கணவர் சுந்தர்.சி
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புக்கு ஆதரவாக அவரது கணவர் சுந்தர்.சி வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து சுந்தர்.சி பேசுகையில், குஷ்புவின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி தான் இந்த வாய்ப்பு. மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் குஷ்பு, இதற்கு மேல் குஷ்புக்கு பணமோ, புகழோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உண்டு, இதற்கான நல்ல வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும், கணவர் என்ற முறையில் அவருக்காக பிரச்சாரம் செய்ய வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.