மீன் குழம்பால் நேர்ந்த விபரீதம்! மனைவியை கொடூரமாக தாக்கி தானும் தற்கொலை! என்ன நடந்தது?
சென்னை அருகே ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த ஆத்திரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த குமார் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், குமார் தனது வேலையை முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி துர்கா, அவருக்கு மீன் குழம்புடன் சாதம் பரிமாரியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவன், ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு செய்தாயா என மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றியத்தில், கடுப்பான கணவர், மனைவியை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் துர்காவோ சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார்.
இதனால் மிரண்டு போன கணவர், மனைவி உயிரிழந்து விட்டதாக நினைத்து அச்சத்தில் வேஷ்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் கண்டு பதறியடித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த துர்காவை மீட்டு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.