ஆன்லைனில் கணவனை வெறும் ரூ.2000க்கு ஏலம் விட்ட மனைவி - பரப்பரப்பை ஏற்படுத்திய சம்பவம்

shocking news Husband sold for Rs.2000 online sale
By Nandhini Feb 04, 2022 09:03 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை ஏலத்தில் விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அயர்லாந்தைச் சேர்ந்தவர் சேலிண்டா மெக் அலிஸ்டர். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜான் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கோல்ட் என்ற 4 வயது மகனும், ரைடர் எனும் 6 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், மீன் பிடிக்க ஜான் சென்றார்.

அந்த நேரத்தில் அப்பெண், சமூகவலைத்தளத்தில் "இவர் பெயர் ஜான், உயரம் ஆறடி, வயது 37, ஷூட்டிங், ஃபிஷ்ஷிங் ஆர்வம் உள்ள நபர், பீஃப் ஃபார்மர், இன்னும் வீட்டு வேளைகளில் கொஞ்சம் அனுபவம் தேவை, தற்சமயம் இவரை வைத்து மேய்க்க தனக்கு பொறுமை இல்லை என்று விளம்பரத்தில் தெரிவித்து வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த விளம்பரத்தில் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் சேர்த்துக் கொண்டு லூட்டி அடிப்பதாகவும், இரவு தாமதமாக உறங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதெல்லாம் தனது கோபத்தை தூண்டுவதாக பகிர்ந்திருந்தார். இந்த விளம்பர செய்தியை ஆன்லைனில் பார்த்த ஜானின் நண்பர்கள் அவரை அழைத்து அலார்ட் செய்த பிறகுதான் இந்த சம்பவம் குறித்து ஜானுக்கு தெரியவந்தது.

இந்த விளம்பரம் குறித்து ஜான் அறிந்த பிறகு, கோபம் கொள்ளவில்லை, வேடிக்கையாக சிரித்துள்ளார். மேலும், இந்த விளம்பரம், குறிப்பிட்ட இணையத்தளத்தின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்களுக்கு கீழ் இல்லாத காரணத்தால், குறுகிய நேரத்தில் நீக்கப்பட்டது.

ஆனால், இந்த குறுகிய காலத்தில் 25 டாலருக்கு விற்பனை விலை நிர்ணயக்கப்பட்ட ஜானுக்கு 63 யூரோ வரை ஏலத்தின் விலை கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 

கணவனை பெண் ஒருவர் ஆன்லைன் ஏலத்தில் விட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.