தகாத உறவில் மனைவி - காதலனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன்!
மனைவியுடன் கள்ள உறவில் இருந்த நபரின் கழுத்தை அறுத்து கணவன் ரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கர்நாடகா, பட்லபள்ளியைச் சேர்ந்தவர் விஜய்(35). துணி வியாபாரியாக உள்ளார். இவரது மனைவி மாலா(28). சிந்தாமணி என்ற பகுதியில் துணி வியாபாரம் செய்து வரும் நிலையில், அவருக்கும் மாரேஷ்(32) என்ற மற்றொரு துணி வியாபாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அது நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இந்நிலையில், மாரேஷுக்கும் விஜய்யின் மனைவி மாலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அது விஜய்க்கு தெரிய வரவே இருவரையும் கண்டித்துள்ளார்.
கணவன் வெறிச்செயல்
ஆனால் அதனை கண்டுக்கொள்ளாமல் இருவரும் உறவை தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவன், மாரேஷை மது அருந்த யாரும் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது விஜயின் நண்பர்கள் சிலரும் அங்கிருந்தனர்.
தொடர்ந்து, விஜய் தன்னிடம் இருந்த கத்தியால் மாரேஷின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்துள்ளார். இதனை அவரது நன்பர்களை வீடியோவாகவும் எடுக்கக் கூறியுள்ளார். பின் தப்பியோடியுள்ளனர்.
அப்போது அவ்வழியே சென்றவர்கள் மாரேஷை மீட்டு மருத்துவம்னையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்தார். இதற்கிடையில் வீடியோ வைரலான நிலையில், விஜய்யை போலீசார் கைது செய்தனர்.