மனைவி பிரிந்ததால் ஆத்திரம் - அந்தரங்க படங்களை உறவினர்களுக்கு அனுப்பிய கணவர்
மனைவி பிரிந்த ஆத்திரத்தில் அந்தரங்க படங்களை கணவர் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்தரங்க படங்கள்
புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் காஞ்சனா. கடந்த சில நாட்களாக இவரது அந்தரங்க படங்களை யாரோ அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காஞ்சனா இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பல பெண்களுடன் தொடர்பு
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், அந்தரங்க படங்களை அனுப்பிய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஐடி எந்த ஊரில் இருந்து இயங்குகிறது, எந்த செல்போன் மூலமாக செயல்படுகிறது என கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து திண்டிவனம் விரைந்த சைபர் கிரைம் காவல்துறையினர், பாண்டியன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பாண்டியனுக்கும், காஞ்சனாவுக்கும் 2வது திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு பாண்டியனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்த காஞ்சனா பாண்டியனிடம் இருந்து பிரிந்தார்.
தன்னுடம் சேர்ந்து வாழுமாறு காஞ்சனாவை பாண்டியன் அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் ஆத்திரத்தில் காஞ்சனாவுடன் எடுத்த அந்தரங்க புகைப்படங்களை அவரது உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். பாண்டியனை கைது செய்த, காவல்துறையினர் அவரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.