சென்னையில் அதிர்ச்சி சம்பவம் : மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த கொடூர கணவன்

womensetonfire husbandarrested crimewomen
By Swetha Subash Mar 08, 2022 01:01 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

சென்னையில் கணவனே மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த வளசரவாக்கம் பெத்தானியா நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜா -ராதா தம்பதி.

இவர்கள் கடந்த ஒரு மாதமாக அந்த பகுதியில் வசித்து வரும் நிலையில், ராஜா பெயிண்டர் வேலை பார்த்த வந்துள்ளார், மனைவி ராதா கோடம்பாக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராதாவின் நடத்தை மீது ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி சம்பவம் : மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த கொடூர கணவன் | Husband Sets Fire On Wife In Chennai

இதனால் ஆத்திரமடைந்த ராஜா மண்ணெண்ணை எடுத்து ராதாவின் மேல் ஊற்றிவிட்டு தீ வைத்துள்ளார்.

இதில் அலறிதுடித்த ராதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தீக்காயங்களுடன் கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் ராதா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார் ராஜா மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.