மனைவி, குழந்தைகள் மீது உயிரோடு தீ வைத்த கொடூரம் - கணவன் வெறிச்செயல்!
மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீது நபர் ஒருவர் தீ வைத்துள்ளார்.
குடும்பத் தகராறு
ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 7 வயதில் ஒமிஷா என்ற பெண் குழந்தையும், 4 வயதில் நிகில் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
திருமலைச்செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இதனால் சுகன்யா 2 குழந்தைகளுடன் கோபத்தில் தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மகன் உயிரிழப்பு
தொடர்ந்து இவர்களைப் பார்க்க திருமலைச் செல்வன் சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.
இதில் துடிதுடித்த அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். உடனே, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
மகன் நிகில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.