மனைவியை வைத்து நண்பர்களுடன் சூதாடிய கணவர் - தோற்றதால் நேர்ந்த கொடூரம்
மனைவியை வைத்து கணவர் சூதாடிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூதாட்டம்
மனைவியை வைத்து சூதாடிய கதையை புராணத்தில் படித்துள்ளோம். ஆனால் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் நகரை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவியை வைத்து நண்பர்களுடன் சூதாடியுள்ளார். சூதாட்டத்தில் தோல்வியடைந்தால் தனது மனைவியை பாலியல் துன்புறுத்தல் செய்யவும் கணவர் அனுமதித்துள்ளார்.
மனைவியை வைத்து சூது
இது குறித்து அந்த பெண் ராம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "எனக்கு 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். என்னுடைய மாமனாரும், என்னுடைய கணவரும் வரதட்சணை கேட்டு என்னை சித்ரவதை செய்து தாக்கினார்கள். மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான என்னுடைய கணவர் 7 ஏக்கர் நிலம் மற்றும் என்னுடைய நகைகள் அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துவிட்டார்.
அதன் பிறகு அவரது நண்பர்களுடனான சூதாட்டத்தின்போது என்னை வைத்து ஆடினார். மேலும் அதில் தோல்வி அடைந்த பின், என்னை அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்யவும் அனுமதியளித்துள்ளார். மேலும், தண்ணீர் கூட கொடுக்காமல், அவரது நண்பர்கள் முன்னிலையில் என்னை தாக்கினார்.
தாக்குதல்
இதனால் நான் என்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால், செப்டம்பர் 4 ஆம் தேதி, அங்கு நண்பர்களுடன் வந்த என் கணவர், என்னுடைய ஆடைகளைக் கிழித்து, கையை உடைத்து, வீட்டுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டு வந்ததால் அவர்கள் ஓடிவிட்டார்கள்.
என்னுடைய கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எனக்கு செய்த கொடுமைகளை என்னால்வெளியில் சொல்ல முடியாது. அதை நான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவேன்" என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.