மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்- கடைசியில் கணவருக்கு நேர்ந்த கதி!

Fire Crime Accident Vellore
By Vidhya Senthil Nov 13, 2024 10:15 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

    மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்து வேறுபாடு

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி- சித்ரா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 10-வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்- கடைசியில் கணவருக்கு நேர்ந்த கதி! | Husband Poured Petrol On His Wife Set Her On Fire

இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, சித்ரா ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

கணவரை பிரிந்த பெண்.. கொன்று மூட்டையில் கட்டி வீச்சு - கள்ளக்காதலன் வெறிச்செயல்!

கணவரை பிரிந்த பெண்.. கொன்று மூட்டையில் கட்டி வீச்சு - கள்ளக்காதலன் வெறிச்செயல்!

இந்நிலையில்,நேற்று இரவு சித்ரா வீட்டில், குழந்தைகளுக்குப் பலகாரம் செய்து கொடுத்து கொண்டிருந்த போது முகமூடி அணிந்தபடி வந்த மர்ப ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து சித்ரா மீது ஊற்றி உள்ளார். அப்போது அடுப்பு பகுதியில் சித்ரா இருந்ததால் தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

பெட்ரோல் ஊற்றி.. 

இதனால் வலி தாங்க முடியாமல் கதறிய சித்ரா, தன் மீது பெட்ரோல் ஊற்றிய நபரையும் இறுக்கி அணைத்துக் கொண்டார். சித்ராவில் சத்தம் கேட்டு ஒடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். பின்னர் முகமூடி அணிந்து வந்த நபர் சித்ராவின் கணவர் பாலாஜி எனத் தெரிய வந்தது.

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்- கடைசியில் கணவருக்கு நேர்ந்த கதி! | Husband Poured Petrol On His Wife Set Her On Fire

இதனையடுத்து பொது மக்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்