ரத்தம் சொட்ட சொட்ட கணவரை அடித்துக் கொன்ற கொடூர மனைவி - உடைந்தையாக இருந்த மகன்கள் - நீதிமன்றம் அதிரடி
தீர்ப்பு சின்னசேலம், காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு ராஜதுரை, சுப்ரமணியன் என்ற இரு மகன்கள் உள்ளனர். ரவிச்சந்திரனுக்கும், மாலதி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் ரவிச்சந்திரனுக்கும், மாலதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த மாலதி மற்றும் ராஜதுரை, சுப்ரமணியன் ஆகிய 3 பேரும் சேர்ந்த கடந்த 2019ம் ஆண்டு உருட்டுக்கட்டையால் தாக்கி கொடூரமாக ரவிச்சந்திரனை கொலை செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கள்ளகுறிச்சி 3ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாலதி, ராஜதுரை, சுப்ரமணியன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.