துடிக்க.. துடிக்க கணவரை கத்தியால் குத்தி கிழித்த கொடூர மனைவி - நடந்தது என்ன? அதிர வைத்த திடுக்கிடும் தகவல்
காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த இளையராஜா (42). இவர் சென்னையில் தங்கி ஹோட்டலில் வேலைப் பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இளையராஜா சென்னையிலிருந்து எப்போவாவதுதான் குழந்தைகளையும், மனைவியையும் பார்க்க ஊருக்கு வருவார்.
இதற்கிடையில் அனிதாவிற்கும், இளையராஜாவின் சித்தப்பா மகன் ஜெயபால் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளனர்.
இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இது இளையராஜாவிற்கு தெரியவந்தது. இதனால், கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு இருவரும் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதன் பிறகு கணவன், மனைவி சமரசமாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்.23ம் தேதி, நெய்வாசலில் உள்ள மனைவி வீட்டிற்கு இளையராஜா வந்துள்ளார். அன்று இரவு இளையராஜா அங்கேயே தங்கியுள்ளார்.
அப்போது, மறுபடியும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அனிதா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து இளையராஜாவை சராமரியாக தாக்கி தள்ளிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த இளையராஜா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளையராஜாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் அனிதாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், கணவனை கொலை செய்ததாக, அனிதா போலீசில் சரணடைந்தார். இதனையடுத்து, தலைமறைவாக உள்ள கள்ள காதலன் ஜெயபாலை போலீசார் தேடி வருகின்றனர்.