கணவனின் பிறந்த நாளை இறந்த நாளாக்கிய கொடூர மனைவி - கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம், இடுக்கி, கட்டப்பனைச் ரஞ்சித். இவரது மனைவி அன்னலட்சுமி. ரஞ்சித்துக்கு கடந்த 6ம் தேதி பிறந்தநாள். அன்று காவல் துறையினருக்கு கட்டப்பனை பகுதி மக்கள் போன் செய்து ரஞ்சித் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார் என்று தகவல் கொடுத்தார்.
இது குறித்து செய்தி அறிந்ததும் போலீசார் ரஞ்சித் வீட்டிற்கு விரைந்து வந்தனர். அப்போது, சடலமாக கிடந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரஞ்சித் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அன்னலட்சுமி முன்னுப்பின் முரணாக பேசினார்.
இதனால் அன்னலட்சுமி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அன்னலட்சுமி கூறுகையில், தினமும் என் கணவர் குடித்துவிட்டு வீட்டு வருவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். குடித்துவிட்டு என்னை அடித்து துன்புறுத்துவார். ரஞ்சித் பிறந்த நாள் அன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அன்றைக்கும் என்னிடம் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நான், மரக்கட்டையால் ரஞ்சித்தின் தலையில் ஓங்கி அடித்தேன். இதில், அவர் மயங்கி கீழே விழுந்தார். மயங்கி கிடந்தவரை ஒரு கொடியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் உடலை வீட்டிற்கு பின்புறம் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்டேன் என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
இக்கொலையை வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்னலட்சுமியிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.