வேறொரு நபருடன் ரீல்ஸ் செய்த மனைவி - ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டிய கணவன்!

Attempted Murder Chennai Instagram
By Sumathi Oct 12, 2022 07:02 AM GMT
Report

வேறொரு நபருடன் சேர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ் செய்த மனைவியை கணவன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ் 

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம் தற்போது பலரையும் ஆக்கிரமித்துள்ளது. அதனால், கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு அதனால் விவாகரத்து, கொலை, தற்கொலை சம்பவங்கள் பல நடந்துள்ளன.

வேறொரு நபருடன் ரீல்ஸ் செய்த மனைவி - ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டிய கணவன்! | Husband Murder Attempt On Wife Because Of Insta

குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர் இன்ஸ்டாவில் தொடர்ச்சியாக ரீல்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவன் ஆத்திரம்

இந்த நிலையில் ஈஸ்வரி வேறொரு ஆணுடன் சேர்ந்து டூயட் செய்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டுள்ளார். இதனை கண்ட சாலமன் ஆத்திரமடைந்து ஈஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அப்போது ஏற்பட்ட மோதலில் மனைவியை வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஈஸ்வரி தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.