வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த மனைவி - ஆத்திரத்தில் ஆசிட் வீசிய கோர கணவன்!
தூத்துக்குடி அருகே வேறொரு நபருடன் தொடர்பில் இருந்த மனைவியின் மீது ஆசிட் ஊற்றிய கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அசோக் நகரை சேர்ந்த ரவி மற்றும் அவரது மாலா என்பவரும் திருமணம் முடித்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மாலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சூசை மச்சாது என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனை கண்டறிந்த ரவி பலமுறை மாலாவையும், அவரது கள்ளககாதலரையும் கண்டித்துள்ளார்.
இதனை கண்டுகொள்ளாத இந்த கள்ளக்காதலர்கள் கூலாக அவர்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு சூசை மச்சாது மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டிற்கே வந்து மாலாவுடன் பேசிக்கொண்டிருந்தார்களாம்.
அப்போது அங்கு வந்த ரவி ஆத்திரத்தில் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் உச்சக்கட்ட கோபமடைந்த ரவி, மனைவி மாலா, அவரது கள்ளக்காதலர் சூசை மற்றும் அவரது மகன் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மூவரும்
பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கணவர் ரவியை தீவிரமாக
தேடி வருகின்றனர்.