மனைவியின் சகோதரியைக் காதலித்த கணவர்: விபரீதத்தில் முடிந்த சம்பவம்

love husband wife sister Bengaluru
By Jon Mar 31, 2021 01:38 PM GMT
Report

பெங்களூரில் தனது மனைவியின் சகோதரி மீது கொண்ட காதலால் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நிருபதுங்கா லே-அவுட், 4-வது கிராசில் வசித்து வந்தவர் ஷாரா(வயது 28). இவரது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். ஷாராவுக்கு பெற்றோர் இல்லை.

அவருக்கு ஒரு சகோதரியும், 2 சகோதரர்களும் உள்ளனர். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு வேலைக்காக தனது சகோதரர்கள், சகோதரியுடன் ஷாரா பெங்களூருவுக்கு வந்து விட்டார். அதன்பிறகு, ரெசிடன்சி ரோட்டில் உள்ள மதுபான விடுதியில் நடன அழகியாக ஷாரா வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த 27-ந் தேதி ஷாராவை பார்க்க, அவரது சகோதரர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஷாராவை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஷாராவை கொலை செய்ததாக, அவரது தங்கையின் கணவர் நவாஜ் பாஷா(29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 26ம் தேதி ஷாரா கொலை செய்யப்பட்ட சமயத்தில் நவாஜ் பாஷாவும் அவரது மேவியும் நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து ஷாராவை யாரோ கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி நவாஜ் பாஷா தனக்கு சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் போலீசார் ஷாராவின் செல்போனை ஆய்வு செய்ததில் நவாஜ் தான் அவரிடம் அதிகம் பேசியதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நவாஜ் பாஷாவிடம் கிடுக்குப்பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். இறுதியில் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதனையடுத்து ஆர்.டி.நகர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்