உறவினர்களைப் பஞ்சாயத்துக்கு அழைத்த மனைவி..தலையை வெட்டி கொன்ற கணவர்- நடந்தது என்ன ?

Madurai Crime Murder
By Vidhya Senthil Dec 24, 2024 05:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  குடும்ப தகறராறில் உறவினர்களைப் பஞ்சாயத்துக்கு அழைத்த மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  குடும்ப தகறராறு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலாஜி- ராமகலா. இந்த தம்பதிக்குத் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 11 வயதில் கோகுல் என்ற மகனும், 5 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். பாலாஜி சொந்த ஊரில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.

உறவினர்களைப் பஞ்சாயத்துக்கு அழைத்த மனைவியைக் கணவன் கொலை

அவ்வப்போது கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத் தட்டிக்கேட்க ராமகலாவின் உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர்கள் வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அடிக்கடி போன் பேசிய மனைவி..உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர் - டிராவல் பேக்கில் எடுத்து சென்ற கொடூரம்!

அடிக்கடி போன் பேசிய மனைவி..உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர் - டிராவல் பேக்கில் எடுத்து சென்ற கொடூரம்!

மனைவி கொலை 

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகலாவின் கழுத்தை வெட்டியுள்ளார். ராமகலாவில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதனையடுத்து பாலாஜி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

உறவினர்களைப் பஞ்சாயத்துக்கு அழைத்த மனைவியைக் கணவன் கொலை

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராமகலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.