மனைவியை கொன்று டிரம்மில் அடைத்துவிட்டு.. மட்டன் குழம்புடன் கொண்டாடிய கணவன்!
மனைவியை கொன்று டிரம்மில் அடைத்த கணவன் 2 மாதங்களுக்கு பின் சிக்கினார்.
நடத்தையில் சந்தேகம்
திருவள்ளூர், துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(39). இவரது மனைவி பிரியா ( 26 ). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலம்பரசன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பிரியா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்தி சிலம்பரசன் அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக, பிரியாவை குறித்த எந்த தகவலும் இல்லாததால், அவரது குடும்பத்தினர் மகளை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளனர். தீபாவளியான அன்று பிரியாவின் சகோதரர் பட்டாசு மற்றும் ஸ்வீட் பாக்ஸுடன் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
கணவன் வெறிச்செயல்
மேலும், இட்லியையும் அதில் மட்டன் குழம்பையும் ஊற்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு மாதங்களுக்கு முன் வேறு ஒருவருடன் பிரியா ஓடிவிட்டதாக சிலம்பரசன் தெரிவித்துள்ளார். உடனே, பிரியாவின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரின் விசாரணையில் பிரியாவை சிலம்பரசன் கொலை செய்து புதைத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. தொடர் விசாரணையில் பிரியாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலம்பரசன் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ஏற்பட்ட தகராறின் போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அன்று இரவு, பிரியாவின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து பைக்கில் எளாவூர் ஏழு கண் பாலம் நோக்கி 3 கி.மீ., சென்றுள்ளார். அங்குள்ள சுடுகாடு அருகே பள்ளம் தோண்டி , பிரியாவின் உடலை புதைத்து பேரலை வீசி சென்றுள்ளார். அதன் அடிப்படையில் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.