இடையில் வந்த மாமியார்; மனைவியை கழுத்தறுத்த கணவன் - பரபரப்பு வாக்குமூலம்!
மனைவியை கத்தியால் கழுத்து அறுத்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு
நெல்லை, ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜ். பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிரித்திகா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மீனாட்சிபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர். இந்நிலையில், பிரித்திகா அவரது குடும்பத்தினருடன் செல்போனில் பேசுவது தொடர்பாக கணவன், மனைவி இடையே அவ்வப்போது சண்டை வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று பிரித்திகா தனது தாயாருடன் பேசி உள்ளார். இதனால் கோபமுற்ற அன்புராஜ் மனைவியின் கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கி காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
கணவன் வெறிச்செயல்
தகவலறிந்த போலீஸார் அவரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் அன்புராஜ், சமீபத்தில் பிரித்திகாவின் தந்தை இறப்புக்கு பிறகு குறிப்பிட்ட அளவு பணம் பிரித்திகாவுக்கு வழங்கப்பட்டது. அதை செலவு செய்தது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
பிரித்திகா அவருடைய பெற்றோருடன் பேசுவதால் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது என்பதால் பேசக்கூடாது என்று கூறினேன். இது தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பிரித்திகாவை கொலை செய்தேன்.
பின்னர் தப்பி செல்வதற்காக, மனைவி உடலை வீட்டில் போட்டு கதவை வெளியே பூட்டிவிட்டு, கோவில்பட்டிக்கு பஸ்சில் ஏறி பயணம் செய்தேன். பின்னர் மன வேதனையுடன் குடும்பத்தாரிடம் செல்போனில் பேசினேன்.
அவர்களது அறுவுறுத்தலின் பேரில் போலீசில் சரண் அடைந்தேன் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.