கர்ப்பிணி மனைவியை கத்திரிகோலால் கழுத்தறுத்து கொன்ற கணவர்
அரியானா மாநிலம் Gurugram அருகே தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கணவர் கழுத்தறுத்து கொன்றுள்ளார்.
கத்திரிகோலால் கழுத்தறுத்து கொன்ற கணவர்
அரியானா மாநிலம் Gurugram அருகே கர்ப்பிணியாக இருந்த தன் மனைவியை கணவன் கழுத்தறுத்து கொன்றுள்ளார். குறிப்பிட அந்த நபர் 27 வயதுடைய அன்ஷுல் தவான் ஆவார் .
இவர் ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அன்ஷுல் தவான் தனது கர்ப்பிணி மனைவியுடன் இந்த சம்பவம் நடக்க முன்னர் காதலர் தினம் கொண்டாடி இருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 2026 பிப்ரவரி 14-15 அன்று காதலர் தினத்தை கொண்டாடிய பின்னர் காரில் இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.
இதன் பின்னர் போலீசாருக்கு அன்ஷுல் தவான் தன்னுடைய மனைவியை யாரோ கொன்றுவிட்டதாக தகவல் தெரிவித்து உள்ளார்.
ஆரம்பத்தில் யாரோ கொன்றுவிட்டதாக கூறிய அன்ஷுல் தவான் தீவிர விசாரணை போலீஸ் நடத்தியதால் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்தக் கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதாகவும், தடயங்களை மறைக்க கையுறைகளை அணிந்து செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மனைவியை கொலை செய்ததற்கு காரணம் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் அதனால் அடிக்கடி வாக்குவாதம் வந்ததுடன் அது முற்றியதால் கொலை செய்ததாகவும் அவர் கூறி உள்ளார்.
காவல்துறையினர் தற்போது அன்ஷுல் தவான் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Pandian Stores 2: மீனா வீட்டில் தஞ்சமடைந்த மயில்... செந்தில் கோபத்தில் எடுக்கும் முடிவு என்ன? Manithan