மனைவியுடன் வாழ இடையூறு - மாமியாரை கொன்ற கணவர்

Sivagangai
By Karthikraja Sep 18, 2024 04:00 PM GMT
Report

மனைவிக்காக கணவர் இரட்டை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியுடன் தகராறு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த பசுபதி(38) என்பவர் லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுகன்யா(35) என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 

husband wife fight

குடிப்பழக்கம் உள்ள பசுபதி அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் ஏற்படும் தகராறில் பலமுறை சுகன்யா கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விடுவார். 

அண்ணனைதான் திருமணம் செய்வேன் - அடம் பிடித்த தங்கை; அதிர்ந்த அண்ணி

அண்ணனைதான் திருமணம் செய்வேன் - அடம் பிடித்த தங்கை; அதிர்ந்த அண்ணி

இரட்டை கொலை

இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில் தனது மகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். எங்கு தேடியும் சுகன்யா கிடைக்கவில்லை. 

husband kills mother in law

இதற்கு மாமியார் பாண்டிலட்சுமி(52)தான் காரணம் என நினைத்து ஆத்திரத்தில் இருந்த பசுபதி, இன்று பாண்டிலட்சுமி வீட்டிற்கு வந்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த பாண்டிலட்சுமியின் தாயார் சொர்ணவள்ளியையும்(80) சராமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பசுபதியை தேடி வருகின்றனர். இரட்டை கொலை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.