தகாத உறவில் மனைவி - படுக்கையிலேயே காதலனை கொன்ற கணவன்!
மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கணவன் கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
விருதுநகர், சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. எட்டாக்காபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார்.
அதே பட்டாசு ஆலையில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் சாத்தூர் படந்தாலை சேர்ந்த கருப்பசாமியுடன் ரூபாவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதலன் கொலை
இந்நிலையில் கணவன் அம்மாவை பாதயாத்திரை அனுப்பி வைப்பதற்காக சென்றுவிட்ட நிலையில், கருப்பசாமி ரூபாவுடன் தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது திடீரென நள்ளிரவில் வீட்டிற்கு வந்த கணவன், மனைவி ரூபா கருப்பசாமியுடன் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் கருப்பசாமியை கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.