இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் ஆடிய நாடகம் - புதுமனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர், மனைவியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்சூரன்ஸ் பணம்
ஜார்கண்ட், ஹஜாரிபாக் பதாமா அருகே முகேஷ்குமார் மேத்தா (30), செவந்திகுமாரி (23) தம்பதி வசித்து வந்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியுள்ளது.
இந்நிலையில், செவந்திகுமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை முகேஷ் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, செவந்திகுமாரி உயிரிழந்தால் 30 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு பணம் வரும் என்பதற்காக திடீரென முகேஷ்குமார் அவரை ஹெல்மாட்டால் தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றுள்ளார். மேலும், அதனை சாலை விபத்து போல மாற்றி நாடகம் போட்டுள்ளார்.
கணவன் நாடகம்
தொடர்ந்து செவந்தகுமாரியின் இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த இறப்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் போலீஸில் புகாரளித்துள்ளனர்.
அதன்படி விசாரணையில், முகேஷ்குமார், செவந்திகுமாரி உயிரிழந்துவிட்டால் விபத்துக் காப்பீடு தொகை ரூ. 30 லட்சம் கிடைக்கும் என்பதற்காக திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
உடனே முகேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.