புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கணவர்.. தனது கணவரின் பணியினைத் தொடர ராணுவத்தில் இணைந்த மனைவி!

By Irumporai May 29, 2021 04:57 PM GMT
Report

ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணமடைந்த தன் கணவரின் நினைவாக, தனது பணியினை உதறி தள்ளி விட்டு ராணுவத்தில் சேர்ந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

இந்திய ராணுவ அதிகாரியான மேஜர் விபுதி ஷங்கர் தவுன்டியால் என்பவர் 2019-ம் ஆண்டு காஷ்மீர் மாவட்டம் புல்வாமா நகரில் நடைபெற்ற தீவீரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் 2018-ம் ஆண்டுதான் இவருக்கும் நித்திகா கவுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமாண ஒரே வருடத்தில் கணவரை இழந்த நித்திகா தளர்ந்து போகவில்லை தன் கணவரின் தேசம் காக்கும் பணியைத் தொடர முடிவெடுத்தார்.

இதற்காக தான் வேலை செய்து கொண்டிருந்த கார்ப்பரேட் பணியை விட்டு விலகி ராணுவத்தில் சேர்வதற்கான short service commission தேர்வை எழுதினார்.

பின்னர் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில்சேர்ந்து வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தார் நித்திகா .

தற்போது, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் அதிகாரியாக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கே உரிய மிடுக்கான நிமிர்ந்த நடையுடன் வந்து உயர் அதிகாரியிடமிருந்து மரியாதையைப் பெற்று ராணுவத்தில் நித்திகாஇணைந்த அந்தத் தருணம் காண்போர் நெகிழும் வண்ணம் அமைந்திருந்தது.

2019-ம் ஆண்டு தீவிரவாதிகளுடனான சண்டையின்போது தேசத்திற்காக தனது இன்னுயிரையே தியாகம் செய்தார் மேஜர் விபுதி ஷங்கர் தவுன்டியால்.

தற்போது சீருடையில் சுடர்விடும் தனது மனைவியினை பார்த்து இன்று நிச்சயம் அவரது ஆன்மா புன்னகைக்கும்