மனைவியின் நடத்தையில் சந்தேகம் - ஆத்திரத்தில் கம்பால் அடித்தே கொன்ற கணவர்!

Attempted Murder Thoothukudi
By Vinothini Jun 27, 2023 07:42 AM GMT
Report

தூத்துக்குடியில் ஒருவர் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகம்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் இவருக்கு 50 வயது ஆன நிலையில் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி 45 வயதான மாரியம்மாள், இவர் தினமும் ஆடு மேய்த்து வருகிறார். இவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

husband-killed-his-wife-on-suspicion-of-misconduct

நேற்று வழக்கம்போல் இவரது மனைவி ஆடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். மாலையில் ஊருக்கு வெளிப்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மாரியப்பன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கொடூர கொலை

இந்நிலையில், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது ஆத்திரமடைந்த இவரது கணவர் அருகில் இருந்த கம்பை எடுத்து இவரை சரமாரியாக தாக்கியுள்ளார், அதில் மாரியம்மாள் மயக்கமடைந்தார்.

husband-killed-his-wife-on-suspicion-of-misconduct

அந்த வழியே சென்றவர்கள் இவர் மயக்கத்தில் இருப்பதை கண்டு ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு மயங்கி கிடைத்தவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை, மாரியப்பன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் சரணடைந்தார், அவரை ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.