மனைவியை தர்காவிற்குள் அழைத்து சென்று கணவன் செய்த காரியம் - நிகழ்ந்த கொடூர சம்பவம்!
நெல்லையில் தனது மனைவியை தர்காவிற்கு அழைத்து சென்று கணவன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகராறு
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான் (வயது 32). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும் டவுனில் உள்ள முகம்மது அலி தெருவை சேர்ந்த மகபூப்ஜான் என்பவரின் மகள் ஹசீனா பேகம் (வயது 28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சமீப காலமாகவே குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதனால் இவரது மனைவி அவரது தாய் வீட்டில் சென்று தங்கி இருக்கிறார்.
கொடூரம்
இந்நிலையில், இவர் மனைவி அழைத்து வர அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர் தன் மனைவியை தர்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று தர்காவிற்குள் இருந்து அலறும் சத்தம் கேட்டுள்ளது.
அக்கம் பக்கத்தினர் சென்று பார்க்கையில் அங்கு அந்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.இதனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது முற்றிய நிலையில் இவர் ஆத்திரமடைந்து அவரது மனைவியை சரமாரியாக குத்தி கொன்றதாக கூறியுள்ளார்.