மகளிடம் அத்துமீறிய கணவன் - ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற மனைவி!
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கணவனை மனைவி வெட்டி கொன்றுள்ளார்.
பாலியல் தொல்லை
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி(50). இவர் மனைவி, மாமியார், ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். மகனும், மகளும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் தினமும் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களை தாக்கி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது போதயில் வீட்டிற்கு வந்த இவர் தனது மகளிடம் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.
என்ன நடந்தது?
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அவரை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, மாமியார், பிள்ளைகளை அடித்துள்ளார். மேலும், அவர்களை வீட்டில் இருந்தும் விரட்டியுள்ளார். தொடர்ந்து அவரது மனைவி தாய் மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருவாரூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
மகளுக்கு தொல்லை கொடுத்த கோபத்தில் இருந்த மனைவி, தனது அக்கா, அவரது கணவர், மகன், மகள், தாய் என 6 பேருடன் நள்ளிரவில் சென்று வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த கணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், உருட்டுக்கட்டையால் தாக்கியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அதனையடுத்து, சம்பவ இடம் வந்த போலீஸார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் இச்செயலில் ஈடுபட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.