கணவனை கறி வெட்டும் கத்தியால் கண்டம் துண்டமாக்கிய கொடூர மனைவி!!
காஞ்சிபுரம் அருகே கணவனின் கொடுமையை தாங்க முடியால் கொதித்தெழுந்த மனைவி, கணவனை கறி வெட்டும் கத்தியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த நஷ்ஷாத் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ரேவதி என்ற இந்து பெண்ணை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பமாக வசித்து வருகின்றனர். நஷ்ஷாத் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில், வழக்கம் போல் ரேவதியிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியை எடுத்து மனைவியை விரட்டி விரட்டி வெட்ட முயன்றுள்ளார். இதனால் உயிரை காப்பாற்ற நினைத்த மனைவி கழிவறையில் ஒளிந்து கொண்டுள்ளார்.
சிறுது நேரம் அமர்ந்திருந்த மனைவி திடீரென வீரம் கொண்டு, சிங்கப்பெண்ணாக மாறி கணவனிடம் இருந்த கத்தியை பிடுங்கி கணவனை கண்டந்துண்டமாக ஆத்திரம் தீரும் வரை வெட்டி சாய்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து கணவனை கொன்றுவிட்டதாக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சடலத்தை மீட்டு ரேவதியை
கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.