கள்ளக்காதலுக்காக கணவனின் ஆணுருப்பை நசுக்கி கொலை செய்த கொடூர மனைவி!

நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி! கர்நாடகாவில் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவின் மைசூருவில் உள்ள ஒரு கார்ப்பரேஷனில் குரூப் டி ஊழியராக பணிபுரிந்த வெங்கடராஜுவை உமா என்ற பெண் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் . இந்நிலையில் கணவரை விட உமா 20 வயது இளைய பெண் என்பதால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதனால் உமா தனது முன்னாள் காதலர் அவினாஷை சந்தித்து அவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகள் உல்லாசமாக இருந்துவந்துள்ளனர்.

இந்த உண்மையை கண்டறிந்த வெங்கடராஜ் உமாவை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமா கணவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் கள்ளக்காதலுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நள்ளிரவில் கணவருக்கு மயக்க மருந்து கலந்த காப்பியை கொடுத்துவிட்டு, அவரின் ஆண் உறுப்பை நசுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவர் தலைவலியால் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.

இது குறித்து சந்தேகமடைந்த வெங்கட்ராஜின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில் மர்ம உறுப்பு சேதப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொலையாளி மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்