மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கொடூர கணவன் - பின்னணி என்ன?
மனைவியுடன் மகள்களையும், தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு
விருதுநகர், திருவிளந்தால்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (47). விவசாயத் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 5 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் தகராறு முற்றவே,
கணவன் வெறிச்செயல்
ஆத்திரத்தில் சுந்தரவேலு தனது மனைவி, மகள்கள் 3 பேரையும் வீ்ட்டில் இருந்த அரிவாள் எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வசூலை வாரிக் குறித்த தாய்கிழவி... வெற்றிக் கொண்டாட்டத்தில் மிகப்பெரிய நடிகர்களை விளாசிய ராதிகா Manithan
அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை IBC Tamil