சட்னி நல்லா இல்லாததால் மனைவி கொடூர கொலை - சட்னியை தலையில் கொட்டி கணவர் வெறிச்செயல்!
மத்திய பிரதேசத்தில் டேஸ்ட்டா சட்னி அரைக்காததால் மனைவியை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தத்தியாவை சேர்ந்த குப்தா சமோசா விற்பனை செய்து வருகிறார். அவருடைய மனைவி ப்ரீத்தி தினமும் சமோசாவுக்கு சட்னி அரைத்து கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் சட்னி அரைத்து கொடுத்துள்ளார். இதனை சுவைத்து பார்த்த குப்தா, டேஸ்டாக இல்லை என அந்த சட்னியை ப்ரீத்தி தலையிலேயே கொட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ப்ரீத்தி, கணவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில், மனைவியை தலையிலேயே தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ப்ரீத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலையாளி
குப்தாவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.