திருமணமான 2 நாளில் எரிந்து சாம்பலான காதல் மனைவி - கணவன் செய்த கொடூர செயல்!
மதுரை அருகே திருமணமான 2 நாளில் மனைவியை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனின் கொடூர செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் முட்புதருக்குள் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொண்டு விசாரணை செய்தனர்.
விசாரணையில், இவர் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கிளாடிஸ் ராணி என்பது தெரியவந்தது. மேலும் கிளாடிஸ் ராணி பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணியை காதலித்து வந்துள்ளதாகவும், அவரால் கிளாடிஸ் 4 மாத கர்ப்பமாக இருப்பதும் அவரது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் ராணியின் வீட்டார், ஜோதிமணியை கடந்த 2 ம் தேதி கட்டாயத்திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி ராணியை வெளியில் அழைத்து சென்ற ஜோதிமணி வீட்டிற்கு தனியாக திரும்பியுள்ளார்.
இது குறித்து ராணியின் பெற்றோர் கேட்ட போது ராணியை காணவில்லை என கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் ஜோதிமணியை அழைத்து விசாரித்த போது, விருப்பமின்றி திருமணம் செய்து வைத்ததால் அத்திரத்தில் ராணியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அதன் பிறகு அவரின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் ஒப்புகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜோதிமணியை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.